சென்னை: டியூட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்த போலீஸ் எஸ்ஐ லாரி மோதியதில் தலை நசுங்கி உயிரிழந்தார்.

சென்னை: டியூட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்த போலீஸ் எஸ்ஐ லாரி மோதியதில் தலை நசுங்கி உயிரிழந்தார். ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து ஏர்போர்ட் வழியாக செல்ல கத்திபாரா பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அதே திசையில் சிமெண்ட் கலவை செய்யும் கனரக லாரி ஒன்றும் வந்துகொண்டிருந்தது. அப்போது ஆட்டோவை முந்தி சென்ற லாரி, இடதுபுறமாக பூந்தமல்லி வளைவில் திரும்பியது. ஆனால் அந்த வழியில் சென்ற நடராஜனை கவனிக்காமல், லாரி வேகமாக அவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். கத்திபாரா மேம்பாலத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.
@ போலீசார் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நடராஜ், ஹெல்மட் வைத்திருந்தும் அதை அணியாமல் போயுள்ளதும், வெறும் தொப்பி மட்டுமே அணிந்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.🌐