செய்யாறு அருகே பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயி மகள் தற்கொலை முயற்சி; கற்கள் நடும் பணியை கைவிட்டு திரும்பிய அதிகாரிகள்

செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக விவ சாய நிலத்தில் குறியீடு கற்களை பதித்ததை அகற்றக்கோரி, விவசாயி ஒருவரின் மகள் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால், கற்கள் நடும் பணியை கைவிட்டு அதிகாரிகள் திரும்பினர்.

சென்னை – சேலம் இடையே 277 கிமீ தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்காமலும் அவர்களது அனு மதி இல்லாமலும் விவசாய நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து குறியீடு கற்களை நடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செய்யாறு அருகே நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களை சமாதானப்படுத்தும் போலீஸார்

இந்நிலையில், செய்யாறு அடுத்த எருமைவெட்டி கிராமத் தில் விவசாய நிலங்களை அள வீடு செய்து குறியீடு கற்களை பதிக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி மீனாட்சி மற்றும் அவர்களது மகள் ஆகி யோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது, எதிர்ப்பையும் மீறி குறியீடு கற்களை அதிகாரிகள் பதித்தனர்.

கற்கள் அகற்றம்

இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி, குறியீடு கற்களை பதித் தால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்வேன் என்று எச்சரித்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவரிடம் இருந்த மண்ணெண் ணெய் கேனை பறித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த மீனாட்சியின் மகள், ‘எங்களது விவசாய நிலத்தில் நடப்பட்ட குறியீடு கற்களை எடுக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்’ என்று கூறி கழுத் தில் சிறிய கத்தியை வைத்துக்கொண்டு எச்சரித்தார். அவரது கழுத்தில் லேசான கீறல் விழுந்தது. இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, அவரது விவசாய நிலத்தில் பதிக்கப்பட்ட கற்களை அகற்றினர்.

இதுகுறித்து மீனாட்சி கூறும்போது, “எங்களது வீடு, 10 ஏக்கர் விவசாய நிலம், மோட்டார் இணைப்புடன் கூடிய 2 கிணறுகளை பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக குறியீடு கற்களை பதிக்கின்றனர். நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளோம். வலுக்கட்டாயமாக நிலத்தை கைப்பற்றினால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்” என்றார்.

Leave a comment

Your email address will not be published.