ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இரண்டாவது வாய்ஸ் மெயிலை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா ஜாவேத் தனது தாயார் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இரண்டாவது வாய்ஸ் மெயிலை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஊடகங்களுடன் பேசினால், “மோசமான விளைவுகள் ஏற்படும்” என்று அச்சுறுத்தப்பட்டதாகவும், காஷ்மீரிகள் விலங்குகளைப் போல கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளனர், அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என இல்திஜா ஜாவேத் கூறி உள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கற்பனை செய்ய முடியாத அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு குடிமகனுக்கு பேச உரிமை இல்லை. சிரமமான உண்மையை கூறியதற்காக நான் ஒரு போர்க் குற்றவாளியைப் போல நடத்தப்படுகிறேன் என்பது ஒரு சோகமான முரண் என ஆடியோ செய்தியுடன் வெளியிடப்பட்ட கடிதத்தில் இல்திஜா ஜாவேத் கூறி உள்ளார்.🌐