ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்திய பொருளாரம் சரிந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாதத்துக்கு முன்புவரை 5.8 சதவீதமாக இருந்த ஜிடிபி 5 சதவீதமாக பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2019 – 2020-ன் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தச் சரிவை இந்திய பொருளாதாரம் சந்தித்துள்ளது.
@ “இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை நிலவிவருவது, ஜிடிபி வீழ்ச்சியடைந்ததன் மூலம் தெள்ளத் தெளிவாகியுள்ளது. வேலையிழப்பு, தொழில்துறை பிரச்னைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். பாஜக அரசு வாய் பேசுவதை விடுத்து, வேலை இழப்பு, தொழில் துறை வீழ்ச்சி குறித்து உண்மையான பிரச்னைகளைப் பேசத் தொடங்குமா – மு.க. ஸ்டாலின்🌐