நீங்கள் வணங்கவேண்டிய அதிதேவதை இவர்கள்தான்!

செல்வம் வளம் கொழிக்க, எடுத்த காரியங்களில் வெற்றிபெற, உங்கள் கனவுகள் நனவாக, எப்போதும் மகிழ்ச்சி பொங்க, குடும்பத்தில் அமைதியும் வளமும் நிறைவாக இருக்க, மொத்தத்தில் எல்லாமும் பெற்று நிறைவாய் வாழ இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

ஆக, எப்படி இறை அருளை பெறுவது?

இதோ… பார்ப்போம்.

உங்களில் ஒரு சிலருக்கு நிச்சயம் ஒரு விஷயம் தெரியும் …

உங்கள் நண்பரோ அல்லது உங்கள் அருகில் உள்ள வீட்டினரோ புதியதாக ஒரு கோயிலுக்குச் சென்று வந்ததும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து வந்த துயரங்கள் நீங்கி வளமான வாழ்வு அமைந்திருக்கும். நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

இது எதனால் ஏற்பட்டது?

ஒன்று அவரின் நட்சத்திரத்தின் அதிதேவதை தொடர்பான அல்லது அவரின் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான சம்பத்துதாரை நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வந்திருப்பார்,

அதன் காரணமாக அவரின் வாழ்வு உயரவும், மேம்படவும் செய்திருக்கும்.

இப்படி உங்கள் நட்சத்திரத் தொடர்பான தெய்வம் எது என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உங்கள் நட்சத்திரம் தொடர்பான தெய்வத்தை அறிந்து கொண்டு, அந்தத் தெய்வத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

அதேபோல், சம்பத்துதாரை நட்சத்திரத்தின் தெய்வ வழிபாடு உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து உங்கள் வாழ்வை வளமாக்கும் என்பது உண்மை.

இப்போது உங்கள் நட்சத்திரத்திற்கான அதிதேவதை யார் என்று பார்க்கலாமா?

நட்சத்திரம் அதிதேவதை

அசுவினி சரஸ்வதி

பரணி துர்கை

கார்த்திகை அக்னி

ரோகிணி பிரம்மா

மிருகசீரிடம் சந்திரன்

திருவாதிரை நடராஜர்

புனர்பூசம் அதிதி

பூசம் பிரகஸ்பதி (குரு)

ஆயில்யம் ஆதிசேஷன்

மகம் பித்ருக்கள்,சுக்கிரன்

பூரம் பார்வதி

உத்திரம் சூரியன்

அஸ்தம் சாஸ்தா

சித்திரை விஷ்வகர்மா

சுவாதி வாயு

விசாகம் முருகன்

அனுசம் ஶ்ரீலஷ்மி

கேட்டை இந்திரன்

மூலம் நிருதி

பூராடம் வருணன்

உத்திராடம் கணபதி

திருவோணம் விஷ்ணு

அவிட்டம் வசுக்கள்

சதயம் எமன்

பூரட்டாதி குபேரன்

உத்திரட்டாதி காமதேனு

ரேவதி சனிபகவான்

இப்போது நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அறிந்துகொண்டீர்கள். இனியென்ன… அந்தத் தெய்வத்தை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நினைக்க மறக்காதீர்கள். வழிபட மறக்காதீர்கள்.

அதேபோல உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர தேவதை தொடர்பான ஆலயங்களுக்கு சென்று வர 100 சதவிகித வெற்றியை அடைவீர்கள் என்பதும் சத்தியம்.

பூசம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை குரு பகவான். இவரையும் வணங்கி , இவருக்கு சம்பத்து நட்சத்திரமான ஆயில்யத்தின் தேவதையான “ஆதிசேஷனையும்” வணங்கி வந்தால், எல்லாம் நன்மையாகும். எல்லாக் காரியமும் ஜெயமாகும்.

ஆனால் ஆதிசேஷனுக்கு எங்கு போவது? எங்கும் போக வேண்டாம் நம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆதிசேஷனின் மேல் சயனித்து அருள் பாலித்து வருகிறார் அல்லவா. அவரை தரிசிக்கும் போது ஆதிசேஷனையும் சேர்த்தே நாம் வழிபடுகிறோம். அவரிடமும் நம் கோரிக்கையையும் கண்ணீரையும் வைப்போம். கை மேல் பலன் தருவார் ஆதிசேஷன்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குபேரனையும் வணங்கி, உத்திரட்டாதியின் காமதேனுவையும் வணங்க வேண்டும்.

இப்படி தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வணங்கி வாருங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று, சுபிட்சத்துடன் நிம்மதியும் நிறைவுமாக வாழ்வீர்கள்.

Leave a comment

Your email address will not be published.