டாடா டிகோர் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

டாடா டிகோர் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

புதுடெல்லி:
டாடா டிகோர் புஸ் (BUZZ) எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஸ்பெஷல் எடிஷன் டிகோர் மாடலின் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிமிட்டெட் எடிஷன் டிகோர் மாடல் XT ட்ரிம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்டேன்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்பெஷல் எடிஷன் வேரியன்ட் ஏழு பிரத்யேக அம்சங்களை கொண்டிருக்கிறது. கிளாஸ் பிளாக் ரூஃப், பியானோ பிளாக் ORVM, டூயல்-டோன் வீல் கவர்கள், முன்பக்க கிரில் ரெட் டீடெயிலிங் மற்றும் புஸ் (BUZZ) பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது.
உள்புறத்தில் பெரி ரெட் அக்சென்ட்கள், பிரீமியம் ஃபுல்-ஃபேப்ரிக் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டேஷ்போர்டு மற்றும் ஸ்டீரிங் வீல்களில் பியானோ பிளாக் டீடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. இவை இன்டீரியர் அம்சங்களை மேலும் அழகாக்குகின்றன.
இந்தியாவில் விற்பனையாகும் செடான் மாடல்களில் டாடா டிகோர் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. டிகோர் மாடலில் ABS+EBD, கார்னர் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், டாடாவின் கனெக்ட் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆப்ஷன் மற்றும் ஹார்மன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை காரின் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
டாடா டிகோர் புஸ் (BUZZ) எடிஷன் பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.5.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்றும் டீசல் வேரியன்ட் விலை ரூ.6.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.