டி.ஆர்.பாலுவின் கருத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தி.மு.க. எம்.பி., தயாநிதி மாறன்,

டி.ஆர்.பாலுவின் கருத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தி.மு.க. எம்.பி., தயாநிதி மாறன், பாராளுமன்ற விதிமுறைகளை விளக்கும் புத்தகத்தில் உள்ள சில வாசகங்களை மேற்கோள் காட்டி பரூக் அப்துல்லா இந்த அவைக்கு வர இயலாமல் போனது ஏன்? என்பது தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேசினார்.
@ பாராளுமன்றத்தில் அமித் ஷா தெரிவித்ததுபோல், சுதந்திரமாக என் விருப்பம்போல் நான் வீட்டில் அடைந்து கிடக்கவில்லை. என் வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே போக முடியாது. உள்ளே வேறு யாரும் வர முடியாது. என் வீட்டு வாசலில் போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார். இப்போதுகூட நான் கதவை உடைத்துக் கொண்டுதான் உங்களை சந்தித்து பேச வந்திருக்கிறேன். – ஃபரூக் அப்துல்லா