டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 14வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய தூத்துக்குடி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக அந்த அணி வீரர் ராஜ கோபால் சதிஷ் 74 ரன்களை குவித்தார்.178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய அந்த அணி வீரர் விவேக் 62 ரன்கள் கவித்தார். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.