டீன் சாரதாவுக்கு நெஞ்சு வலி

பணியில் இருக்கும் போதே திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாரதாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியை நம்பாமல், தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார்! அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவனையில் சிறப்பு மருத்துவ பயிற்சி முடித்த பல மருத்துவர்கள் இருக்கும் நிலையில் டீன் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவது அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசாங்கம் கோடி கோடியாக செலவு செய்து இத்தனை வசதிகள் செய்து கொடுத்துள்ளது. இதற்கு தலைமை தாங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரியே அரசு மருத்துவமனையையும், அங்குள்ள டாக்டர்களையும் நம்பாமல் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லலாமா? என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
@ தன் உசிரு பெருசு மக்களே!