டீ மாஸ்டரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

டீ மாஸ்டரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

சேலம், செப்.19: சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் யுவராஜ்(46). இவர் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப்பில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு, சிவனார் கோயில் தெரு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், பணத்தை கேட்டு மிரட்டினர். யுவராஜ் பணம் கொடுக்க மறுக்கவே, அவரை தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டி ₹1,400ஐ பறித்து சென்றனர். இதில் காயமடைந்த யுவராஜ், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ெசவ்வாய்பேட்டை போலீசார், யுவராஜை தாக்கி பணம் பறித்த, களரம்பட்டியைச் சேர்ந்த வேலாயுதம் (27), குகை பஞ்சந்தாங்கி ஏரியைச் சேர்ந்த ஜெயவேல் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன் (29) ஆகிய மூவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.🔴