Home டூவீலரில் சென்ற ஒரு இளைஞரை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றிருக்கிறது.

டூவீலரில் சென்ற ஒரு இளைஞரை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றிருக்கிறது.

கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக சூர்யபிரகாஷ் பணியாற்றியவர்., இவர் அலுவல் வேலையாக அரவக்குறிச்சி சாலையில் பயணித்திருக்கிறார்., அப்போது டூவீலரில் சென்ற ஒரு இளைஞரை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றிருக்கிறது., அதைபார்த்ததும் பதறிப்போன டி.ஆர்.ஓ. சூர்யபிரகாஷ் உடலில் பலத்த காயம்பட்ட நிலையில் கிடந்த அந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க, அங்கிருந்து 108 ஆம்புலன்ஸூக்கும், கரூர் அரசு மருத்துவமனைக்கும் போன் செய்து தகவல் சொல்லி இருக்கிறார். உடனே,கரூரில் இருந்து 108 ஆம்புலன்ஸூம் வந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றுவதுவரை பார்த்துவிட்டு, ஆம்புலன்ஸ் டிரைவரிடம், ‘கரூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் சொல்லிட்டேன். டாக்டர்கள் தயாராக இருக்காங்க. சீக்கிரம் அங்க இவரை கொண்டு போயிருங்க’ என்று சூர்யபிரகாஷ் சொல்லி இருக்கிறார். அதற்கு சரியென தலையாட்டிய அந்த ஆம்புலன்ஸ் டிரைவர், விபத்தில் காயமடைந்த இளைஞரைக் கொண்டு போனது கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அங்கு அந்த இளைஞருக்குச் சிகிச்சை அளித்த பின்,அவரது உறவினர்களிடம் பில் தொகையை கூற, அவர்கள் கலங்கி போயிருக்கிறார👇🏾🌐