டெல்லி டூர்ல அது எதிர்பார்க்காத மீட்..!’’ – ராகுல் காந்தி சந்திப்பு பற்றி கலையரசன்

சமீபத்தில், நடிகர் கலையரசன் இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கிறார். இதுகுறித்த அவருடைய பேட்டி.

``டெல்லி டூர்ல அது எதிர்பார்க்காத மீட்..!’’ - ராகுல் காந்தி சந்திப்பு பற்றி கலையரசன்

 ‘கபாலி’ படத்தைவிட, ‘காலா’ ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அதுக்குக் காரணம், சாமான்யர்களுக்கான அரசியலை இந்தப் படம் பேசியிருந்துச்சு. ரஞ்சித் அண்ணா எப்போவுமே தலித் அரசியல் பேசுறார்னு பலபேர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, அவர் அப்படியில்ல. பொதுவா இருக்கிற பிரச்னைகளைத்தான் பேச நினைக்கிறார். அவரை குறுகிய வட்டத்துக்குள்ளே சில பேர் சுருக்கிடுறாங்க. அதான் ஏன்னு புரியல;  என்னால ஏத்துக்க முடியல. ரஞ்சித் அண்ணா பேசுற எல்லாத்தையும் தேவையில்லாத வேற ஏதோ ஒண்ணோட கனெக்ட் பண்ணுறாங்க. ‘காலா’ படத்தோட கதை என்னவோ அதைப் பத்தி பேச மாட்றாங்க. இதெல்லாம்தான் எனக்கு வருத்தமா இருக்கு. ஏன்னா, அவருடைய தம்பியா இருந்து இதை நான் ஃபீல் பண்றேன்” என்று பேச ஆரம்பிக்கிறார் நடிகர் கலையரசன்.

‘மெட்ராஸ்’ படத்தின் மூலமா கலையரசன்கிற ஒருத்தனை எல்லாருக்கும் அறிமுகப்படுத்துனதே ரஞ்சித் அண்ணாதான். ரெண்டு பேரும் ஒரு படத்துல கமிட் ஆகும்போது, டைரக்டரா அவர் எனக்கு இருப்பார். அதைத் தாண்டி பெர்சனலா ரஞ்சித் எனக்கு அண்ணாதான். ரஞ்சித் அண்ணா டீம்ல இருந்த எல்லாரும் ஒண்ணா சேர்ந்து டெல்லிக்கு டூர் போலாம்னு இருந்தோம். கடைசி நேரத்துல சிலரால் வர முடியல. அதனால, நானும் அண்ணாவும் போனோம். ஒரு நாலு நாள் ட்ரிப். டெல்லிக்குப் போகும்போது, ராகுல் காந்தி சாரை மீட் பண்ணப் போறோம்கிற விஷயம் எனக்குத் தெரியாது. முதல்ல, நானும் ரஞ்சித் அண்ணாவும் சில இடங்களை சுற்றிப்பார்த்தோம். அப்போதான் தெரியும் செவ்வாய்க்கிழமை ராகுல் காந்திகூட அண்ணாவுக்கு மீட்டிங் இருக்குனு.

Leave a comment

Your email address will not be published.