டெல்லி மாணவியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு.

காஷ்மீர் விவகாரம்: தேசத்துரோக சட்டத்தின்கீழ் டெல்லி மாணவியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு. வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா ஷீலா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் மாணவி ஷீலா ரஷீத் வேண்டுமென்றே போலிச் செய்திகளை பரப்புகிறார்.
இவர் செய்து வருவது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124-ஏ இன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றமாகும். இது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை தூண்டுகிறது. இவரது செயல்பாடுகளை முடக்கி இவர் கிரிமினல் குற்றச்சாட்டில் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
@ காஷ்மீரில் இந்திய ராணுவம் பொதுமக்களை துன்புறுத்துவதாக தனது ட்விட்டர் பதிவுகளில் ஷீலா ரஷீத் தெரிவித்திருந்தார். இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.🌐