தகவல் உரிமை சட்டத்தில் திருப்பதி தேவஸ்தானம்: நடிகை ரோஜா வலியுறுத்தல்

திருப்பதி தேவஸ்தானத்தை தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் கொண்டுவர வேண்டும் என நடிகை ரோஜா கூறினார்.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், நகரி தொகுதி எம்எல்ஏ வான ரோஜா, நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் முதலில் சிறப்பு நிதிக்கு ஒப்புக்கொண்டு, அது தொடர்பாக அமைச்சரவை யிலும் தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் திடீரென தனது நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கேட் கிறார். சுமார் 4 ஆண்டுகள் வரை மத்திய அரசில் பங்கேற்று, தனது கட்சியை சேர்ந்த 2 பேரை மத்திய அமைச்சர்களாக்கி, பதவியை அனுபவித்து விட்டு, கடைசி ஆண்டில் பதவி வேண்டாம் என அவர் நாடகமாடுகிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஆந்திராவின் உரிமையை மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டார் சந்திரபாபு நாயுடு.

24 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரை, அரசியல் நோக்கத் துடன் வயதை காரணம் காட்டி நீக்கியுள்ளனர். அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ் தானத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். கோயில் முன்பிருந்த ஆயிரங்கால் மண்டபத்தை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும். தவறினால் இதற்காக உயர் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு ரோஜா கூறினார்.

Leave a comment

Your email address will not be published.