தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை அகமதாபாத்‌ மாநகராட்சி மருத்துவமனைக்‌ குழு சந்தித்து பேசியது.

சென்னை : நகர்ப்புற மற்றும்‌ ஊரகப் பகுதிகளில்‌ உள்ள சமுதாய நல மருத்துவமனைகள்‌ உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து சென்னையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை அகமதாபாத்‌ மாநகராட்சி மருத்துவமனைக்‌ குழு சந்தித்து பேசியது.

தமிழக நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளாச்சி மற்றும்‌ சிறப்பு திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்‌.பி. வேலுமணியை குஜராத்‌ மாநிலம்‌, அகமதாபாத்‌ மாநகராட்சி மருத்துவமனைக்‌ குழுத் தலைவர் திவாங்‌ தானி தலைமையிலான மாமன்ற உறுப்பினர்கள்‌ அடங்கிய மருத்துவமனைக்குழு இன்று சந்தித்துப் பேசியது. சென்னையில் உள்ள தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில்‌ நகர்ப்புற மற்றும்‌ ஊரகப் பகுதிகளில்‌ உள்ள சமுதாய நல மருத்துவமனைகள்‌, மகப்பேறு மருத்துவமனைகள்‌, அம்மா உணவகங்கள்‌, அம்மா குடிநீர் மற்றும்‌ துப்புரவு பணிகள்‌ ஆகியவற்றின்‌ செயல்பாடுகள்‌ குறித்து கேட்டறிந்தனர்‌.