தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம் – கடம்பூர் ராஜு

தமிழக பள்ளிகளில் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்’ என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா சாதனை நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.

மனதிற்கும், உடலுக்கும் நல்ல பயிற்சியாக உள்ள யோகாவினை ஒரு இயக்கமாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.

தமிழக பாடத்திட்டத்தில் யோகா விரைவில் ஒரு பாடமாக சேர்க்கப்படும்.  யோகா பயிற்சி அளிக்க அனைத்துப் பள்ளிகளிலும் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார் கடம்பூர் ராஜு.

Leave a comment

Your email address will not be published.