தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பேசியது மக்களவையில் எதிர்பலைகளை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “வங்கதேசம், தமிழகம், மியான்மர் போன்ற இடங்களில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்” எனப் பேசினார். உடனே அவரை இடைமறித்த சபாநாயகர் சுமித்ரா மகாராஜன், “ தமிழ்நாடு அல்ல. இலங்கையில் இருந்து தான் தமிழ் அகதிகள் வருகின்றனர்” எனத் திருத்தி கூறினார்.
அப்போது, தமிழகமும் இந்தியாவில் தான் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் வரமுடியும் எனக் கூறி அதிமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சல் எழுப்ப, உடனே சுதாரித்து கொண்ட கிரண் ரிஜ்ஜு, “இலங்கையில் இருந்து அகதிகள் வருகிறார் என்றுகூறுவதற்கு பதிலாக வாய் தவறி கூறிவிட்டேன்” எனத் தெரிவித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எம்பிக்களை சமாதானம் செய்தார். இதன்பின்னரே அமைதி நிலவியது.