Home தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் தமிழ் உட்பட 22 மொழிகளில் இணையதள முகவரிகள்

தமிழ் உட்பட 22 மொழிகளில் இணையதள முகவரிகள்

168

இணையதளங்களுக்கான முகவரிகளை ஆங்கிலம் தவிர 22 இந்திய மொழிகளில் அறிமுகம் செய்யபட உள்ளன.

internet domain names in indian languages soon

சர்வதேச பெயர் மற்றும் எண்கள் ஒதுக்கீட்டு அமைப்பு (ICANN) இணையதள முகவரிகளை (Internet Domain Name System) உருவாக்குவதை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விரைவில் தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளில் இணையதள முகவரிகளை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது தமிழ், வங்காளம், தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தெலுங்கு ஆகிய ஒன்பது மொழிகளுக்கான பணி நடைபெற்று வருகிறது.” என்று அந்த அமைப்பின் இந்தியத் தலைவர் சமிரான் குப்தா கூறியுள்ளார்.

உலகில் 52% பேர் இன்டர்நெட் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆங்கிலம் தெரிந்தவர்கள். புதிதாக 22 மொழிகள் சேர்க்கப்படுவது மீதம் உள்ள 48% பேரும் இன்டர்நெட் பயன்பாட்டைப் பெற உதவும் என்று அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.