ஆம்ஸ்டர்டம் : நெதர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தன் கையிலிருந்து தவறி விழுந்து தரையில் சிந்திய காபியை அந்நாட்டு பிரதமர் மார்க்ருட்டே தானே சுத்தம் செய்தார். சுத்தம் செய்ய வந்த துப்பரவு பணியாளர்களிடம் தானே சுத்தம் செய்வதாக கூறி துடைப்பனை வாங்கி தானே சுத்தம் செய்தார். பிரதமரின் செயலுக்கு உதவியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கைத்தட்டி பாராட்டுகளை தெரிவித்தனர்.
தரையில் சிந்திய காபியை சுத்தம் செய்த பிரதமர் : இங்க இல்ல நெதர்லாந்துல…
