தாதரில் இருந்து புனே சென்ற சிவ்னேரி பஸ் கவிழ்ந்து 12 பேர் காயம்

மும்பை,
தாதரில் இருந்து புனே சென்ற சிவ்னேரி பஸ் கவிழ்ந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.
பஸ் கவிழ்ந்தது
மும்பை, தாதரில் இருந்து புனேக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அரசு சிவ்னேரி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 17 பயணிகள் இருந்தனர்.
சான்பாடா பகுதியில் சயான் – பன்வெல் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மேம்பாலத்தில் ஏற முயன்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் பஸ் பாலத்தின் தொடக்கத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லேசான காயமடைந்த 7 பயணிகள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர்.
5 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.