சியாங் ராய் :தாய்லாந்தில் குகைக்குள் 12 மாணவர்கள் உள்பட 13 பேர் சிக்கித் தவித்த நிலையில் 9 நாட்களுக்கு பின் அவர்கள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். வடக்கு தாய்லாந்தில் தாம் லுவாங் குகை உள்ளது. இங்கு கடந்த ஜூன் 23-ம் தேதி தங்களது கால்பந்தாட்ட பயிற்சியை முடித்த குழு ஒன்று பொதுழுபோக்கிற்றாக சுற்றி பார்க்க சென்றுள்ளது. பயிற்சியாளர் ஒருவர், 12 மாணவர்கள் என மொத்தமாக 13 பேர் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் குகையை விட்டு வெளியே வருவதற்குள் கடுமையான மழை பெய்துள்ளது. இதனால் குகையின் முன்புற வாசல் மழையால் மூடப்பட்டது.
தொடர்ந்து மழையும் பெய்து வந்ததால் மீட்புப் பணிகள் தாமதமானது. இதனிடையே காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இந்நிலையில் மழை விட்ட நேரத்தில் குகைக்குள் மீட்புப் குழு தேடுதலில் ஈடுபட்டது. அப்போது 13 பேரும் அங்கு வெள்ளம் சூழாத ஒரு இடத்தில் பத்திரமாக உயிருடன் இருந்தனர். இதனால் மீட்புக் குழு மகிழ்ச்சி அடைந்ததோடு அவர்களை பத்திரமாக வெளியே மீட்டு வந்தது. வெளியே வந்த மாணவர்களை அவரின் உறவினர்கள் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர். தங்கள் குழந்தையின் நிலைமை என்ன ஆனதோ என பரிதவித்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நேரில் கண்டதும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இருப்பினும் கடந்த 9 நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாத காரணத்தினால் அவர்கள் மெலிந்த நிலையில் காணப்பட்டனர்.
தாய்லாந்தில் 9 நாட்களாக குகைக்குள் தவித்த 12 மாணவர்கள் பத்திரமாக மீட்பு
