திமுக சார்பில் இடதுசாரி கட்சிகளுக்கு ரூ. 25 கோடி நன்கொடை

மக்களவைத் தேர்தலின் போது திமுக சார்பில் இடதுசாரி கட்சிகளுக்கு ரூ. 25 கோடி நன்கொடை வழங்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்காக கட்சிகள் செய்த செலவினங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அதன்படி, கடந்த ஆக., 27ல் திமுக சார்பில் மக்களவை தேர்தல் செலவினங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 10 மற்றும் செப்., 13 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், நாடு முழுவதும் அக்கட்சியின் செலவினம் சுமார் ரூ. 7.2 கோடி எனக் கூறியிருந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதுவரை தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.🌐