திருமணத்தில் மாட்டுக்கறி பிரியாணி

தனது மகளின் திருமணத்தில் மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டதற்காக சலீமிற்கு இந்த சூலை மாதம் தோராஜி செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனையை வழங்கியது. வர்த்தக நோக்கத்திற்காக மிருகங்களை வதை செய்யும் குற்றம் அவர் மீது சுமத்தப்படவில்லை. தனது மகளின் திருமண கொண்டாட்டத்தில் பிரியாணி செய்யும்போது அவர் மாட்டுக்றியை பயன்படுத்தியதாகத்தான் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது
@ “குற்றம் சுமத்தப்பட்டப்பின் நான் மனதளவில் பெரும் தடுமாற்றத்தை சந்தித்தேன்; மன அழுத்தத்துக்கு ஆளானேன். ஏற்கனவே எனக்கு தீவிர பணக்கஷ்டம் இருந்தது தற்போது எனது மன நிம்மதியும் போய்விட்டது.” இது 42 வயது சலிம் மக்ரானியின் வார்த்தைகள். அவருக்கு வழங்கப்பட்ட 10 வருட சிறைதண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகு – அவர் பேசிய வார்த்தைகள் இவை