திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

தானே,
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
துப்பாக்கியால் சுட்டார்
தானே கல்வா பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தான் சென்று இருந்தார். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த உறவினர் கமலாகாந்துடன் (வயது23) அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்தநிலையில் தானே வந்தவுடன் இளம்பெண் வாலிபருடனான தொடர்பை துண்டித்தார்.
இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கமலாகாந்த் தானே வந்தார். அவர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு கூறினார். இளம்பெண் கமலாகாந்தை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் கொண்டு வந்து இருந்த துப்பாக்கியால் இளம்பெண்ணை சுட்டார். இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது.
10 ஆண்டு ஜெயில்
சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் வாலிபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பிறகு இளம்பெண் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கமலாகாந்திற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

Leave a comment

Your email address will not be published.