திருமலை மலைப்பாதையின் கடைசி வளைவில் நாராயணகிரி மலையில் இயற்கையாக பெருமாள் சிலை அமைந்துள்ளது.

திருப்பதி திருமலை நாராயணகிரி மலையில் 2000 அடி உயரத்தில் உள்ள இயற்கை பெருமாளுக்கு கடும் மழையிலும் ஆயிரம் கிலோ பூக்களால் செய்யப்பட்ட குடமாலை அணிவித்து இளைஞர்கள் வழிபட்டனர். திருமலை மலைப்பாதையின் கடைசி வளைவில் நாராயணகிரி மலையில் இயற்கையாக பெருமாள் சிலை அமைந்துள்ளது. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பாலாஜி நகரை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து குடங்களில் பால், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் 1000 கிலோ பூக்களால் தயார் செய்யப்பட்ட மாலையை அணிவித்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.