தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 வயதில் உடல் நல குறைவால் மரணம்

தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 வயதில் உடல் நல குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

சியோல்,

தென் கொரியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில் (வயது 92).  இவர் அந்நாட்டின் உளவு பிரிவை உருவாக்கியவர்.  கடந்த 1971ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த அவர், அதன்பின்னர் அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பிரதமராக இருந்துள்ளார்.

நாட்டில் இரு முறை பிரதமராக பதவி வகித்த பில் உடல் நல குறைவால் வீட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டு சியோல் நகரில் உள்ள சூன்சன்ஹியாங் பல்கலை கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Leave a comment

Your email address will not be published.