தேசிய சதுரங்க போட்டி : நான்கு முறை பதக்கம் வென்று சாதனை

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை  அடுத்த செருவங்கி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் – சத்திய பூங்குழலி தம்பதியரின் மகள் செந்தமிழ் யாழினி. இவர், தேசிய சதுரங்க போட்டியில், 4 முறை பங்கேற்று, பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தமிழ் யாழினி, 2 முறை தங்கப் பதக்கமும், 2 முறை வெள்ளிப் பதக்கமும்  வென்றுள்ளார்.
விளையாட்டு என்பது ஒழுக்கம், நேர்மையை கற்றுத் தருவதோடு, வெற்றி – தோல்வியை வேறுபடுத்தி பார்க்காத மன நிலையை ஏற்படுத்தும் என்பதால், தமது பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்தியதாக, செந்தமிழ் யாழினியின் தந்தை தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.