தொடரில் மோசமான 👀காட்சிகள் – சன் தொலைக்காட்சிக்கு 💸அபராதம் ❗
📺’மெட்டி ஒலி’ தொடர் மூலம் பிரபலமான திருமுருகன், தற்போது ‘கல்யாண வீடு’ என்ற தொடரை இயக்கி நடித்து வருகிறார். இந்த தொடருக்கு பெண்கள் மத்தில் நல்ல 👏வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 ம் தேதிகளில் பெண்களைத் துன்புறுத்தும் 🙄விதத்திலும், அதனை தண்டிக்கும் வன்முறை காட்சிகளும் இடம்பெற்று இருந்ததாக 📺தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார் மையத்திற்கு 🗣புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சன் தொலைக்காட்சிக்கு பி.சி.சி.சி ரூ.2.5 லட்சம் 💸அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வருகின்ற 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை ‘கல்யாண வீடு’ தொடர் துவங்கும் முன் 30 வினாடிகளுக்கு 😒வருத்தம் தெரிவிக்கும் செய்தியை ஒளிபரப்பவும் ✍உத்தரவிட்டுள்ளது.🔴