நடிகை நவனீத் கௌர் ராணா 36,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பி ஆகியுள்ளார்

🌍தமிழில் நடிகர் கருணாஸுக்கு ஜோடியாக அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்தவர் நடிகை நவனீத் கௌர் ராணா. இதுதவிர அரசாங்கம் என்ற தமிழ் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்த வந்தவர் திடீரென சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தினார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நவனீத் கௌர் ராணா சுமார் 1.37 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். தற்போது 2-வது முறையாக மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் தன் கணவர் ரவி ராணாவின் யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சி சார்பாக போட்டியிட்டு 36,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பி ஆகியுள்ளார்.
🌐