இப்போது நீங்கள் அஜித் ரசிகர் என வைத்துக்கொள்ளுங்கள். அஜித் படல் ரிலீஸின் போது அஜித் ரசிகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து படம் பார்க்கலாம். அதன்பின்? அடுத்த படம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

சினிமா பார்த்தால் அதைப் பற்றி ஃபேஸ்புக்கிலோ டிவிட்டரிலோ எழுதுவது ஓகே. ஆனால், சோஷியல் மீடியாவில் எழுத வேண்டுமென்றும் என்பதற்காகவே படம் பார்த்தால்?
இதுதான் இப்போது அதிகம் நடக்கிறது. எதையாவது புதிதாக ஒரு செய்தியை, கருத்தை இணைய உலகுக்குத் தந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இது ஒன்றும் புதிய விஷயமல்ல. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் எல்லோருக்கும் இது புரியும். ஆனால், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதுதான் இப்போது பிரச்னை. லைவாக வாழாமல், லைக்குக்காக வாழ்பவர்களின் எண்ணிக்கை விர்ரென்று ஏறிக்கொண்டே போகிறது.
அப்படி என்ன சமூக வலைதளங்களின் மீது காதல்? எதனால் இந்த பிரஷர்? ஏகப்பட்ட ஆய்வுகள், சர்வேக்கள் இது தொடர்பாக நடந்திருக்கின்றன. ஆனால், முடிவுகள் நாட்டுக்கு நாடு மாறுகிறது. அப்படி பார்த்தால், நம் மக்களுக்கு ஏன் ஃபேஸ்புக் பைத்தியம்?ட்விட்டர் கிறுக்கு? இன்ஸ்டா அடிக்ஷன்?
1) நாமளாம் குரங்குல இருந்து வந்தவங்க:
கூட்டமாக வாழ்வதுதான் நமக்கு செட் ஆகும். அப்படி நமக்கு பிடித்த கூட்டத்தோடு ஐக்கியமாக சோஷியல் மீடியா உதவுகிறது. நிஜ உலகிலும் அது சாத்தியமென்றாலும் ஒரு சிக்கல் உண்டு. அபார்ட்மென்ட்டில் வாழ்வதாக வைத்துக் கொள்வோம். தீபாவளி என்றாலும் அவர்களோடுதான். நியூ இயர் என்றாலும் அவர்களோடுதான். அதில் சுவாரஸ்யம் குறைவு. இதுவே சோஷியல் மீடியா என்றால் நமக்கு பல வாய்ப்புகள். ட்விட்டரில் பாட்ஷாவாக வாழும் ஒருவர் ஃபேஸ்புக்கில் மாணிக்கமாக இருக்கலாம். நிறைய குழுக்கள், க்ரூப்புகள் உண்டு என்பதால் நம் ரசனைக்குத் தகுந்த அணியோடு சில விஷயங்களைப் பகிரலாம். இது நம்மைச் சமூக வலைதளத்துக்கு அடிமையாக்கும் முக்கியமான காரணி.
2) ரீலையும் ரியலையும் இணைக்கும் வசதி?
இப்போது நீங்கள் அஜித் ரசிகர் என வைத்துக்கொள்ளுங்கள். அஜித் படல் ரிலீஸின் போது அஜித் ரசிகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து படம் பார்க்கலாம். அதன்பின்? அடுத்த படம் வரும்வரை காத்திருக்க வேண்டும். அதுவரை அவர்களோடு தொடர்பில் இருக்க, உரையாட, பகிர்ந்துகொள்ள சமூக வலைதளம் உதவுகிறது.
3) நிறைய பேசணும்:
நில உலகில் இருப்பவர்களுக்கு சமூகத்தைப் பற்றி கவலைப்பட அதிக நேரமில்லை. வாய்ப்பில்லை. ஆனால், நெட்டிசன்கள் அப்படியில்லை. ஒரு ஸ்டேட்டஸில் எடப்பாடியைத் திட்டிக்கொண்டே, இன்னொரு ஸ்டேட்டஸில் அயனாவரம் பாலியல் குற்றவாளிகளை வறுத்தெடுப்பார்கள். அதே சமயம் ட்விட்டரில் கோலிக்கு டிப்ஸ் தந்துகொண்டிருப்பார்கள். ஒரு சின்ன விஷயத்தைக் கூட விட்டுவிடாமல் அது பற்றி கவலைகொள்வார்கள்; கருத்தும் சொல்வார்கள். இதெல்லாம் சோஷியல் மீடியாவில் தானே சாத்தியம்?
4) நான் யார் தெரியுமா?
வீட்டில் நம் வாய்ஸ் எடுபடாது. சேனல் மாற்றுவதில் தொடங்கி சேலை செலக்ஷன் வரை எதுவுமே நம் கையிலிருக்காது. ஆனால், சமூக வலைதளங்களில் எளிதில் நூற்றுக்கணக்கான ஃபாலோயர்ஸ் கிடைத்துவிடுவார்கள். எந்தப் பிரச்னை என்றாலும், எத்தனை பேர் கருத்து சொல்லி முடித்திருந்தாலும் நம் கருத்தைக் கேட்பதற்கும் சிலர் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்காகவாது நாம் ஆக்டிவாக இருந்துதானே ஆக வேண்டும்?
5) கொஞ்சம் சேஃபாவும் இருக்கணும் இல்ல?
அபார்ட்மென்ட்டில் யாரையாவது நமக்கு பிடிக்கவில்லையென்றால் அவர்களை நம் வாழ்விலிருந்து ஒதுக்கிவிட முடியாது. ஆனால், சோஷியல் மீடியாவில் அவரை பிளாக் செய்யலாம். நம் அக்கவுண்ட்டை லாக் செய்யலாம். ரொம்ப கடுப்பானால், சில நாள்கள் டீ ஆக்டிவேட் செய்யலாம். அல்லது, மரு வைத்துக்கொண்டு புதிய ஐடியில் மீண்டும் சுதந்திரமாக கருத்து
சொல்லலாம். இவையெல்லாம் நிஜத்தில் சாத்தியமா பாஸ்?
6) நாங்க கொஞ்சம் ஷோ ஆஃப் தான்:
இந்தக் காரணங்கள் அனைத்தையும் விட முக்கியமான ஒன்று இந்தியர்கள் கொஞ்சம் Show off தான். அதுவும் கடந்த சில தலைமுறைகளில் அதிகமான இந்தியர்கள் மேம்பட்ட வாழ்க்கைமுறைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்கள் செய்யும் சாதனைகளை மாடி மீது ஏறி, கத்தி, ஊருக்கே சொல்ல வேண்டும். அதைச் செய்து தருகிறது சோஷியல் மீடியா. புது கார், புது வீடு, டிகிரி, கேர்ள்/பாய் ஃப்ரெண்டு என அத்தனை விதமான ஷோ ஆஃப்களுக்கும் சோஷியல் மீடியா ஒரு சொர்க்கம். நிஜம்தானே?