நாடகம் விடும் வேளையில் உச்ச காட்சி நடக்குதம்மா ‘

நாடகம் விடும் வேளையில் உச்ச காட்சி நடக்குதம்மா ‘

மூத்த வக்கீல்கள் அந்தஸ்தை முறைகேடாக பயன்படுத்தும்
ப. சிதம்பரம், நளினி சிதம்பரம் !
-பத்திரிகையாளர் உச்ச நீதிமன்றத்தில் புகார்.

‘பார் கவுன்சில் ஆப் இந்தியா’ விசாரணையில் வசமாக சிக்கிய சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம்..!

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சிதம்பரம் செய்து வரும் முறைகேடான நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி 4 வாரத்தில் அறிக்கை தர வேண்டும் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் செய்துள்ள நடைமுறை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் குழுவை பார் கவுன்சில் ஆப் இந்தியா அமைத்துள்ளது.

இந்த விசாரணை குழு பார் கவுன்சில் தலைவர் பிரபாகரன் தலைமையில்
3 மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்
வேத பிரகாஷ், சைலேந்திர துபே மற்றும் ஸ்ரீமலி ஆகியோர் உள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு ‘பயானீர்’ பத்திரிக்கை மூத்த பத்திரிகையாளர் கோபிகிருஷ்ணா,
சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் குறித்து மனு தாக்கல் செய்தார்.

(கோபிகிருஷ்ணா 2 ஜி ஊழலை முதன் முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.)

அந்த மனுவில்,..
பல்வேறு முறைகேடான பண பரிவர்த்தனை வழக்குகளில் விசாரணை குற்றவாளிகளாக நீதி மன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு அளித்த ‘உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள்’ என்ற அந்தஸ்தை தவறான வழியில் பயன்படுத்தி விசாரணை நீதி மன்றத்தில் வழக்கறிஞர்க்குரிய ஆடையை அணிந்து கொண்டு ஆஜராகி வருகின்றனர்.
இது முறைகேடான செயலாகும்…
மேலும் இவர் சார்பில் அதே நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆஜராகி வருகின்றனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஷைனி நீதி மன்றத்தில் எந்த அளவுக்கு சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரத்திற்கு “Benevolent” ஆக சலுகை தரப்பட்டு வருகிறது என்று மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

நீதிபதி ஷைனி பல்வேறு சலுகைகளை சிதம்பரத்திற்கு அளித்து வருவது குறித்தும்.

டெல்லி உயர் நீதிமன்றம் INX மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு தொடர்ந்து சலுகை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் விவரமாக கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரத்திற்கு பல உதவிகளை செய்துள்ளது என்றும்…
2019 ஜனவரி 11 ம் தேதியன்று.
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆஜராகி முன் ஜாமீன் கேட்டு வாதாடுகையில்,
சிதம்பரம் மூத்த வழக்கறிஞர் ஆடையை அணிந்து வந்துள்ளார்.

ஒரு விசாரணை நீதி மன்றத்தில் குற்றவாளியாக விசாரணைக்கு உட்படுத்திய சிதம்பரம் எப்படி மூத்த வழக்கறிஞர் ஆடையை அணிந்து வரலாம் என்பது நடைமுறை நீதிக்கு எதிராக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஒரு விசாரணை குற்றவாளியான சிதம்பரம் சாதாரண உடையில் தான் வர வேண்டும். எதற்காக வழக்கறிஞர் உடையில் வர வேண்டும்..?

இந்த செயல், தனக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் என்ற அந்தஸ்தை தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஏனெனில், முறைகேடான பண பரிவர்த்தனை, மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் கீழும் சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி அனைத்து ஊடகங்களில் ஒளிபரப்பு செய்துள்ளது.

இப்படி மூத்த வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் பல்வேறு சலுகைகளை சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் நீதி மன்றத்தில் பெற்று வருகின்றனர்.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ‘இந்த இருவருக்கும் உச்ச நீதிமன்றம் அளித்த மூத்த வழக்கறிஞர்கள் என்ற அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்’ என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீது சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் மீது பார் கவுன்சில் ஆப் இந்தியா விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை (12-08-2019)
‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் மட்டுமே பிரதானப்படுத்தியுள்ளது.🛑