நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தம்

டீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தினமும் விலை நிர்ணயம் செய்வதை நிறுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், 3-ம் நபர் விபத்து காப்பீட்டுத் தொகை தொடர்ந்து உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும், நீண்ட காலமாக கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் கடந்த மாதம் அறிவித்திருந்தனர்.

மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் ஏற்கெனவே அறிவித்தபடி, இன்று காலை 6 மணி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் காய்கறி மற்றும் சரக்குகள் தேக்கமடை யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய தரைவழி போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரஜீந்தர் சிங் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் லாரி உரிமையாளர்களில் பெரும்பாலானோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர்’’ என்றார்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் கள் சம்மேளன தலைவர் சுகுமார் கூறும்போது, ‘‘லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் லாரிகள் ஓடாது. பால், நீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சேவைக்கு தடை இல்லை’’ என்றார்.

இந்த வேலைநிறுத்தத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்த சில சங்கத்தினர் மட்டுமே பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தென்மண் டல பொதுச் செயலாளர் சண்முகப்பா கூறும்போது, ‘‘வேலைநிறுத்தத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. எங்கள் அமைப்பில் தான் அதிகமான சங்கங்கள் உள்ளன. ஜூலை 20 வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்துள்ளோம். அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதன்பிறகே வேலைநிறுத்தத் தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

 

Leave a comment

Your email address will not be published.