நாட்டிலேயே முதல்முறையாக ஒரு பெண்மணிக்குப் போர்க்களத்தில் சாதுரியமாக செயல்பட்டதாக யுத் சேவா மெடலை (Yudh Seva Medal) அறிவித்துள்ளது இந்திய அரசு…

நாட்டிலேயே முதல்முறையாக ஒரு பெண்மணிக்குப் போர்க்களத்தில் சாதுரியமாக செயல்பட்டதாக யுத் சேவா மெடலை (Yudh Seva Medal) அறிவித்துள்ளது இந்திய அரசு…

ஆம் அவர் பெயர் ஸ்கொட்ன் லீடர் மிந்தி அகர்வால். இவர் பெயரைக் கேட்டால் இனி பாகிஸ்தானின் விமானப்படையே நடுநடுங்கும்….

பிப் 27 அதிகாலை அம்பாலா ஏர் போர்ஸ் பேஸ் ராடார்களில் எட்டு அதிநவீன எப் 16 விமானம், நான்கு மிராஜ் இ மற்றும் நன்கு ஜே.எப்.16 விமானங்கள் இந்தியாவை நோக்கி வருவதற்கான சமிஞ்சைகள் கிடைக்கிறது,

பாக்கிஸ்தான் விமானங்கள் இந்தியாவை தாக்கத்தான் வருகிறது என்பதைச் சட்டென்று கணித்த கிரௌண்ட் கண்ட்ரோலர் ஸ்கொட்ன் லீடர் மிந்தி அகர்வால், இருபத்தி நன்கு பாகிஸ்தானிய போர்விமானங்களை எதிர்கொள்ளும் அதிநவீன இந்தியப் போர் விமானங்கள் மேற்கு மண்டல விமானதளத்திலிருந்து வருவதற்குள் பாக்கிஸ்தான் போர்விமானங்கள் இந்திய எல்லைக்குள் வந்துவிடும் என்று கணித்த ஸ்கொட்ன் லீடர் மிந்தி அகர்வால், உடனடியாக இரு மிக் 21 விமானங்களையும், இரண்டு மிராஜ் 2000 ரக விமானங்களையும் நான்கு சுகோய் 30எஸ் விமானங்களையும் பாக்கிஸ்தான் போர்விமான்களை விரட்ட அனுப்பிவைக்கிறார்.

தனது frequency யில் இருந்த எட்டு போர்விமானங்களைத் திறம்படக் கையாண்டு விமானிகளுக்கு எதிரி விமானங்கள் எங்குள்ளது மற்றும் அவைகள் பற்றிய அனைத்துத் தரவுகள், வரைபடங்கள் மற்றும் தகவல்களை மின்னல்வேகத்தில் பரிமாறி, பாக்கிஸ்தான் போர்விமானங்கள் தங்களது இலக்குகளைத் தாக்காத வண்ணம் பார்த்துக் கொண்டார்.

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை லாக் செய்துவிட்டதாக செய்தியனுப்ப அதை உடனே சுட உத்தரவு பிறப்பித்தவரும் இவரே… பின்பு இந்திய எல்லை தாண்டி செல்கிறீர்கள் திரும்பி வாருங்கள் என்று கட்டளையிட்டும் எதிர்பாராத விதமாக மிக் 21 விமானம் விபத்துக்குளானது..

மிகவும் சாதுரியமாக,பதட்டம் ஏதுமில்லாமல் தனது தெளிவான சிந்தனையால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுப் பாகிஸ்தானின் விமானத் தாக்குதலை தவிடுபொடியாக்கிய இந்த வீரப் பெண்மணி இந்தியாவின் குக்கிராமத்தில் பிறந்து இன்று விமானப்படையில் சிறகை விரித்துப் பறந்து கொண்டிருக்கிறார்.. வாழ்த்துவோம் இந்த வீரப் பெண்மணியை..
ஜெய் ஹிந்த்.