நார்வே செஸ் 2018: விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி…!

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்-ன் 8வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார்.

ஸ்டாவாங்கர்,

நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் எட்டாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்க வீரர் ஃபெபியானோ கருவானாவை எதிர்கொண்டார்.  இதில் ஆனந்த் வெள்ளை நிற காய்களுடனும்,  ஃபெபியானோ கருப்பு நிற காய்களுடனும் மோதினர். கடுமையான சவாலாக இருந்த இந்தப்போட்டியின் 50-வது நகர்த்துதலின் போது ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஆனந்திற்க்கு எந்த புள்ளியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இதுவரை 8 போட்டியில் பங்கேற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவரை எதிர்கொண்ட ஃபெபியானோ 4.0 (8 போட்டிகள்) புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். இதில் மேக்னஸ் கார்ல்சன் 4.0 (7 போட்டிகள்) புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.