நிருபர் ஒருவர் கேள்வி :
”கடந்த 10 ஆண்டுகளாக தனித்தே தேர்தல் களத்தை எதிர்கொள்வதும், மிக மெதுவான வளர்ச்சி விகிதமும் நாம் தமிழர் தம்பிகளுக்கு ஒருவித சலிப்பு உணர்வை ஏற்படுத்திவிடாதா?”
#அண்ணன்சீமான் பதில்
”பதவி உள்ளிட்ட சுய எதிர்பார்ப்புகளோடு செயல்படுகிற சாதாரண கட்சித் தொண்டனுக்குத்தான் நீங்கள் சொல்லுகிற சலிப்பெல்லாம் ஏற்படும். இன விடுதலை, தான் வீழ்ந்தாலும் தன் மண்ணும் மக்களும் வாழவேண்டும் என்ற இலக்கை நோக்கிய புரட்சிகரப் போராளிகளுக்கு, இப்படிப்பட்ட உணர்வுகளெல்லாம் எழுவதில்லை.
நான், தற்சோர்வு அடைந்தால்தான் என் பிள்ளைகளும் தற்சோர்வு அடைவார்கள். கடந்த தேர்தலில், என் தாய், தந்தை, அண்ணன், தங்கைகள் என்று 17 லட்சம்பேர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்காக நான் மேலும் மேலும் உற்சாகத்தோடு வேலை செய்கிறேன்.🔴