நீட் மதிப்பெண் அடிப்படையில் தயாரிப்பு: எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வரை நடைபெற்றது. அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.1,000-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் வாங்கினர்.

அரசு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் நகல் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றனர். 8 நாட்கள் நடந்த விண்ணப்ப விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகின.

இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

Leave a comment

Your email address will not be published.