நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்து 9 பேர் சாவு

 

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று லாகோஸ். இங்குள்ள லாகோஸ்–இபடான் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை பெட்ரோல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

லாகோஸ்,

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே திடீரென கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து சாலையில் ஓடியதால் அங்கு தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் மளமளவென பரவியது.

இதனால் பதறிப்போன வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இருப்பினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். 5 பஸ்கள் உள்பட 50–க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி உருக்குலைந்துபோயின.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.