பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பகத் உசேன்,இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.

பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பகத் உசேன், இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய நெட்டிசன்கள் பலர் உசேனை விமர்சித்துப் பதிவிட்டனர்.இதற்கு உசேன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான்-2 தோல்விக்கு நான் தான் காரணம் என்பது போல் இந்தியர்கள் என்னை கிண்டல் செய்வதைக் கண்டு ஆச்சரியமாக உள்ளது என்று பதிவிட்டு ‘இந்தியா தோற்றுவிட்டது’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு உள்ளார்.🌐