பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

🌍ஹரியானாவில் தொடங்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான குர்மித் ராம் ரஹிம் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். மேலும் பத்திரிகையாளர் சத்ரபதி என்பவரை கொலை செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட அவர் தற்போது சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் தனக்கு பரோல் கேட்டு குர்மித் ராம் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து சிர்சா மாவட்ட நிர்வாகத்திற்கு சிறை கண்காணிப்பாளர் எழுதியுள்ள கடிதத்தில் சிறையில் குர்மித்தின் நடவடிக்கைகள் திருப்தியாக இருப்பதாக கூறியுள்ளதால், குர்மித் ராம் ரஹிம் விரைவில் பரோலில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறரது.🌐