பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர் களுக்கு புதிதாக காம்போ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.1,999-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓர் ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளை மேற்கொள்வதோடு, தினமும் 2 ஜிபி டேட்டாவையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தனியார் செல்போன் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது புதிய காம்போ திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.1999-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓர் ஆண்டு எந்த நெட்வொர்க்குக்கும் அளவில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம். அத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். மேலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் செய்யலாம்.
செப்.22-ம் தேதி வரை
இந்த சலுகை வரும் செப்டம்பர் 22-ம் தேதி வரை அமலில் இருக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.