சென்னை: பிரசிடன்சி கிளப், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இணைந்து 3வது ஆண்டாக ஐடிஎப்-பிசி ஓபன் டென்னிஸ் போட்டிகளை சென்னையில் நடத்துகிறது. ஜூன் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த கிளப்கள் மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளை சேர்ந்த கிளப் வீரர்கள் 150 பேர் பங்கேற்க உள்ளனர்.
போட்டிகள் 35, 45, 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடைபெறும். வெற்றி பெறுபவர்களுக்கு ₹1.75 லட்சம் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகள் தினமும் பிரசிடன்சி கிளப் வளாகத்தில் நடைபெறும்.
பிரசிடன்சி கிளப் டென்னிஸ் 150 வீரர்கள் பங்கேற்பு
