பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 30 ஸ்டீல் தொழிற்சாலைகளை மூட முடிவு செய்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 30 ஸ்டீல் தொழிற்சாலைகளை மூட முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ள ஜார்கண்ட் மாநிலத்தின் மின்சார கட்டண உயர்வு கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்தது. மேலும் சந்தையில் நிலவும் மந்த நிலையும் டாடா மோட்டார்ஸ் மற்றும் துணை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிறுவனங்கள் கடந்த வியாழன் முதல் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் ஆர்டர்கள் குறைந்துவிட்டன. கடந்த இரண்டு மாதங்களாகவே மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே இந்த நிறுவனங்கள் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
@ இந்திய பொருளாதாரம் மோடி ஆட்சியில் மிக வேகமாக சறுக்குகிறது!🌐