புழல் சிறையில் இருந்து மேலும் 11 ஆயுள் கைதிகள் விடுதலை

சென்னை:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறைச் சாலைகளில் 10 ஆண்டு சிறை தண்டனை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.

முதல்கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து கடந்த 6-ந் தேதி 67 ஆயுள்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி 52 கைதிகளும், 20-ம் தேதி 47 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானவர்கள் வெளியில் சென்று சுய தொழில் செய்வதற்காக தனியார் தொண்டு நிறுவனத்தினர் உபகரணங்கள் வழங்கினர்.

இந்நிலையில், 4-ம் கட்டமாக இன்று 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறையில் இருந்து இந்த கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து செல்வதற்காக உறவினர்கள் இன்று அதிகாலையிலேயே வந்து சிறைவாசல் முன்பு காத்திருந்தனர். சிறையில் இருந்து 11 பேரும் வெளியே வந்ததும், அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர்.

Leave a comment

Your email address will not be published.