Home செய்திகள் பேட்ட படத்தை அடுத்து பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் பிரபல நடிகர்

பேட்ட படத்தை அடுத்து பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் பிரபல நடிகர்

25

பேட்ட படத்தை அடுத்து பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் பிரபல நடிகர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ட்ரெய்லர் வெளியானது முதலே யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

தற்போது பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை நடிகர் பிரித்வி ராஜ் பெற்றுள்ளார். பிரித்வி ராஜ் புரோடக்‌ஷன்ஸ் மற்றும் மேஜிக் ப்ரேம்ஸ் இணைந்து பிகில் படத்தை கேரளாவில் வெளியிடுகிறது.

முன்னதாக இந்தாண்டு பொங்களன்று வெளியான பேட்ட படத்தையும் பிரித்வி ராஜ் புரோடக்‌ஷன்ஸ் மற்றும் மேஜிக் ப்ரேம்ஸ் இணைந்து கேரளாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.🌐