‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
@ கடந்த 13-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தபோது, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சாலையை சிவப்பு நிறமாக்க பொதுமக்களின் ரத்தம் இன்னும் எத்தனை லிட்டர் தேவை? என்றும் அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக வேலை செய்யும் அரசு அதிகாரிகள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.🌐
‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி