பைகுல்லா சிறையில் இந்திராணியிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி👇🏾

பைகுல்லா சிறையில் இந்திராணியிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி👇🏾

மும்பையின் பைகுல்லா சிறையில் கொலை வழக்கு காரணமாக அடைக்கப்பட்டிருக்கும் இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறி ப.சிதம்பரத்திற்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர் இந்திராணி முகர்ஜி.

சுமார் ஒரு மணி நேரம் இந்திராணியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்திராணியின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் முதலீட்டை பெற அனுமதி அளித்ததாக ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது