பொதுக்கூட்டம், பேரணி நடத்த, தமிழக, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

தி.மு.க., – காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் முழுவதும், கருத்தரங்கம், பொதுக்கூட்டம், பேரணி நடத்த, தமிழக, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் கேரளாவில், பா.ஜ., தோல்வியை சந்தித்தது. எனவே, இந்த இரு மாநிலங்களிலும், கூடுதல் கவனம் செலுத்தப்படும் என, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், அமித் ஷா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், தமிழக, பா.ஜ.,வில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டங்களை, அமித் ஷா வகுத்துள்ளார்.🌐