பொதுமக்கள் மீது நிதிச்சுமையை செலுத்த மாட்டோம் என்று தெரிவித்த அமைச்சர்..

கஜா புயலில் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட தமிழகத்தில் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக அண்மையில் செய்திகள் வந்தன. நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின்பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த மின் வாரியம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்கிறதா என கவலை அடைந்தனர்.
பொதுமக்கள் மீது நிதிச்சுமையை செலுத்த மாட்டோம் என்று தெரிவித்த அமைச்சர் இந்த ஆண்டு மட்டும் மின்வாரியம் 7 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.🌐