பொறியியல் பட்டதாரிகளுக்கு நிர்வாக பயிற்றுனர்

பொதுத்துறை நிறுவனமான Power System Operation Corporation Ltd நிறுவனத்தில் நிர்வாக பயிற்றுனர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Executive Trainees (Electrical):

45 இடங்கள் (பொது-25, ஒபிசி-10, எஸ்சி-5, எஸ்டி-5).

தகுதி:

எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் (பவர்)/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ பவர் சிஸ்டம்ஸ்/ பவர் (எலக்ட்ரிக்கல்) இன்ஜினியரிங் பாடத்தில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி (இன்ஜினியரிங்) பட்டம்.

2. Executive Trainees (Computer Science): 19.

தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ./பி.டெக்.,/பி.எஸ்சி (இன்ஜினியரிங்) பட்டம்.

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்குமான வயது:

30.7.2017 தேதிப்படி 18 முதல் 25க்குள்.

கல்வித்தகுதியுடன் கேட்-2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட்-2018 தேர்வின் மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.posoco.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

1 comment

Leave a comment

Your email address will not be published.