ப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Image result for pluto planet

வாஷிங்டன்: ப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள் இருப்பதை சமீபத்திய ஆய்வில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ப்ளூட்டோ கிரகத்தை ஆராய நியூ கொரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2015ம் ஆண்டு நாசா அனுப்பி வைத்தது. பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ள மிக சிறிய அளவிலான ப்ளூட்டோ கிரகத்தில் கடும் குளிர் நிலவுகிறது. பூமியில் உள்ள பாலைவனங்களைப் போன்றே ப்ளூட்டோவின் மேற்பரப்பு காணப்படும் என முன்னர் நம்பப்பட்டது. இந்நிலையில் இக்கிரகத்தை நியு கொரைசான் விண்கலம் தற்போது போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அங்கு 2 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு மணல் குன்றுகள் உள்ளன.

டோக்கியோ நகரம் அளவிலான இவை காற்றினால் உருவாகியிருக்க கூடும் என கருதப்படுகிறது. மணல் குன்றுகள் கலிபோர்னியாவின் டெத் பள்ளத்தாக்கு, சீனாவின் தக்லா மகன் பாலைவனத்தில் இருப்பது போன்று உள்ளது. ப்ளூட்டோ கிரகத்தில் உள்ள மணல் குன்றுகளில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள் காணப்படுகின்றன. அவை மணல் போன்று உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை 200 முதல் 300 மைக்ரோ மீட்டர்கள் விட்டம் கொண்ட நுண்துணிக்கைகளாக இருப்பதாகவும், அத்துடன் ப்ளூட்டோவில் நொடிக்கு 10 மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் இத்துணிக்கைகள் இடம்விட்டு இடம் நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கட்டுரை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.